3 நாட்களில் சருமத்தை ஜொலிக்க செய்யணுமா ? இதோ அற்புத பேஸ் மாஸ்க்… இப்படி யூஸ் பண்ணுங்க

0

வெயில் காலத்தில் சருமம் எப்போழுதுமே வறண்டு போய் கருமையடைந்து, பொழிவிழந்து காணப்படும்.

இதற்காக கண்ட கண்ட Whitening cream, லோசன்களை வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை.

இதற்கு இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டே சருமத்தை அழகுப்படுத்த முடியும். தற்போது அவற்றை பார்ப்போம்.

தேவையானவை
  • சந்தனம் – 1 ஸ்பூன்
  • ரோஸ் எண்ணெய் – 2 துளி
  • லாவெண்டர் எண்ணெய் – 2 துளி
  • கடலைமாவு – 1 ஸ்பூன்
  • மோர் – சிறிது
தயாரிக்கும் முறை

முதலில் மேலே சொன்னவற்றை எல்லாம் கலந்து கலக்கும் அளவிற்கு மோர் விட்டு குழைத்துக் கொள்ளுங்கள்.

வாரம் 3 நாட்கள் இரவு படுப்பதற்கு முன் இந்த கலவையை முகத்தில் தடவவும்.

பின்னர் 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சுருக்கம், கருமை, பரு எல்லாம் மறைந்து முகம் பளபளக்கும்.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com