பிந்து மாதவியை அடுத்து, கவர்ச்சி நடிகை சுஜா வாருணி ‘பிக்பாஸ்’ வீட்டில்

ஓவியா வெளியேறிய பிறகு,’பிக்பாஸ்’நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை பிந்து மாதவியை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.அங்குள்ள ‘ஹவுஸ் மேட்ஸ்’களிடத்தில் பிந்து மாதவி பிரச்சனை பண்ணி டி.ஆர்.பி.யை எகிற வைப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பு பிசு பிசுத்துப் போனது. ஆகவே,கலகம் செய்து நிகழ்ச்சியைக் கலகலப்பாக்க புது வரவை இறக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவுசெய்தனர்.

ஆனால் தற்போது, கவர்ச்சி நடிகை சுஜா வாருணி அழைத்து வரப்பட்டுள்ளார்.
அர்ஜுன் நடித்த ‘வாத்தியார்’ படத்தில், ‘என்னடி முனியம்மா ஒங்கண்ணுல மையி’ என்கிற ரீமிக்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சினிமாவுக்கு அறிமுகமான கவர்ச்சி நடிகை சுஜா வாருணி, பிறகு மிளகா, சேட்டை, குற்றம்-23, கிடாரி போன்ற படங்களிலும் குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார்.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com