Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும்; ஐக்கிய நாடுகள் சபை

0

இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது, தமிழ் இளைஞர் யுவதிகள் மீது இராணுவத்தினர் சித்திரவதைகளை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.இலங்கைத் தமிழர்கள் சிலர் தாம் சித்திரவதைக்கு உட்பட்டதாக சர்வதே ஊடகங்களிடம் தகவல் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் கடமையாற்றுவதற்கு இலங்கை படையினர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என ஸ்டீபன் டுஜாரிக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளிக்கும் போதே ஸ்டீபன் டுஜாரிக் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Share.

Comments are closed.