Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

ஆசிய மகளிர் கூடைப்பந்து; கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டம்

0

ஆசிய மகளிர் கூடைப்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நேற்று பெங்களூரில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி போட்டியில், இரு அணிகளும் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடின.

ஆனால் இறுதியில் அபாரமாக வினையாடிய இந்திய அணி, 75-73 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி மகுடம் சூடிய அதேவேளை இவ்வெற்றியின் மூலம் 2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய மகளிர் கூடைப்பந்து தொடரில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது.

Share.

Comments are closed.