Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

தமிழ் மக்கள் தொடா்ந்தும் மௌனமாக இருப்பாா்கள் என்று யாரும் தப்புக் கணக்கு போடக்கூடாது:சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல்

0

நேருக்கு நோ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் ஆயுதப் போராட்டத்தில் தோற்றுப்போன இனம் என்பதற்காக தொடருகின்ற அநீதிகளை கண்கொள்ளாமல் தமிழ் மக்கள் தொடா்ந்தும் மௌனமாக இருப்பாா்கள் என்று யாரும் தப்புக் கணக்கு போடக்கூடாது என்றார்.

. அங்கு அவா் தொடா்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னா் வேறுவிதமான வழிகளில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அநீதிகள் தொடா்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எதிா்கொள்ள திராணியற்றவா்களாக சிறுபான்மை மக்கள் தற்றுபோது இருக்கின்றாாா்கள். ஆனால் தொடா்ந்தும் இவ்வாறு இருப்பாா்கள் என்ற யாரும் தப்புக் கணக்கு போடக் கூடாது. அநீதிக்கு எதிரான போராட்டம் என்பது பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட முடியும்.

இவ்வாறான அநீதிகள் தொடருமாயின் அதற்கு எதிரான மக்களின் எதிா் செயற்பாடுகள் நிச்சயம் வெளிப்படும். அதற்கு யாா் தலைமை தாங்குவாா்கள் – அது எப்போது நடைபெறும் – எவ்வாறு நடைபெறும்? போன்ற கேள்விகளுக்கு தற்போது பதில் கூறமுடியாவிட்டாலும் நிச்சயம் நடைபெறும் என்று சட்டத்தரணி ரட்ணவேல் தெரிவித்துள்ளாா்.

Share.

Comments are closed.