Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

பிரித்தானியாவில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை

0

மாவீரர்களின் நினைவையொட்டி மாவீர் வாரத்தில் பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கார்த்திகை 22ம் திகதி புதன் கிழமை இன்று(22.11.2017) தியாகத்தின் முழு உருவமாய் விளங்கிய எமது மாவீரர்களின் நினைவு நாளினை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் *விளையாட்டும் சமூக நலன் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையில் மாபெரும் குருதிக் கொடை நிகழ்வு பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வானது காலை 8:30 மணிமுதல் மாலை 5 மணிவரை Edgware Community Hospital, Burnt Oak Broadway, Edgware, HA8 0AD எனும் இடத்தில் மிக உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என 100 ற்கும் அதிகமானோர் இரத்த தானம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் அல்லாது ஏராளமான தேசிய செயற்பாட்டாளர்களும் இதில் இணைத்துக் கொண்டு செயற்பட்டனர்.

இது தொடர்பாக விளையாட்டும் சமூக நலன் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் தீபம் செய்திப்பிரிவிற்கு தெரிவித்ததாவது, இக் குருதிக் கொடை நிகழ்வினை சிறப்பாக வழிநடத்தி பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றிகள். மேலும் ஆவணப்படுத்திய விளையாட்டும் சமூக நலமும் அமைச்சின் ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் N.Dhinesh, S.Nethaaji, Theepan ஆகியோருக்கும் நன்றிகள்.

இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு;

www.tgte.org  |  https://www.facebook.com/TGTESCHMEDIA

Share.

Comments are closed.