Breaking News
மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை: கமலஹாசன்
ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்

பிரித்தானியாவில் தாக்குதல் நடத்த திட்டம்: கையும் களவுமாக பிடித்த பொலிசார்!

0

பெய்லிவில் தீவிரவாத குழு உறுப்பினர்களிடம் நடந்த ரகசிய விசாரணையைத் தொடர்ந்து பிரித்தானியாவில் தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்த மூன்று பேர் குற்றவாளி என கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 22 மணிநேர விசாரணைக்கு பின் கைது செய்யப்படடவர்கள், 29 வயதான நவீத் அலி, 25 வயதான கியோபிப் ஹுசைன் மற்றும் 33 வயதான மொஹிபூர் ரஹ்மான் ஆகியோர் ஆவர்.

ஹுசைன் வைத்திருந்த பை ஒன்று அலியின் காரின் பின் இருக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், பையை சோதனை செய்ததில் இறைச்சி கிளீவர் மற்றும் பாதி வடிவமைக்கப்பட்ட குழாய் குண்டு, துப்பாக்கி, தோட்டாக்கள், கையுறை இருந்துள்ளது.

இதனையடுத்து ஹுசைன், அலி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த ரஹ்மான் ஆகியோர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்காவது நபராக 38 வயதான தஹிர் அசீஸ் என்ற நபரும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.