Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

பொதுநலவாய நாடாளுமன்ற சம்மேளனத்தின் கனேடிய கிளையினர் இலங்கை நாடாளுமன்றிற்கு வருகை

0

பொதுநலவாய நாடாளுமன்ற சம்மேளனத்தின் கனேடிய கிளையினர் இலங்கை நாடாளுமன்றிற்கு வருகைத்தந்துள்ளனர்.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் யஸ்மின் ரடான்சியின் தலைமையில் இலங்கைக்கு வருகைத்தந்த குழுவினரில் இருவர் இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளை பார்வையிடுகின்றனர்.

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டு இன்று அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இதை பார்வையிடுவதற்காகவே இவர்கள் வருகைத்தந்துள்ளனர்.இந்த நிலையில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தந்ததை பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால் சபைக்கு அறிவித்திருந்தார்.

இதன்போது நாடாளுமன்றில் விருந்தினர்கள் இருக்கும் பகுதியில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.