Browsing: இந்தியா

India

இந்தியா
0

ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண்! அதிர்ச்சியில் நிற்கும் பெற்றோர்

இந்தியாவில் திருமணம் செய்து கொண்ட இரண்டு பெண்கள், தங்களை பிரிக்க நினைத்தால் தற்கொலை செய்துவிடுவோம்

இந்தியா
0

என் மகனுக்கு என்ன வியாதினு சொல்லுங்க டாக்டர்ஸ்! ஒவ்வொரு நாளும் நினைத்து கண்ணீர்விடும் தாய்

தமிழகத்தில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த மகனுக்கு திடீரென்று இரண்டு கால்கள் செயல் இழந்து போனதால், அவரின் தாய்

இந்தியா
0

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளைக் கடத்த போவதாக வந்த இ-மெயில் மிரட்டலால் காரணமாக, அவரது மகளுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 9ஆம் திகதி முதல்வர் கெஜ்ரிவாலின் அலுவலகத்திற்கு இ-மெயில் ஒன்று வந்துள்ளது.

அதில், ‘உங்களின் மகளைக் கடத்த போகிறோம். அவரைப் பாதுகாக்க என்ன வேண்டுமோ செய்துகொள்ளுங்கள்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பதறிப்போன டெல்லி அதிகாரிகள் முதல்வருக்கு இந்த தகவலை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, முதல்வரின் மகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருடன் 24 மணிநேரமும் பொலிசார் ஒருவர் இருப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த மெயில் தொடர்பாக டெல்லி சைபர் க்ரைம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தும் இது குறித்து முதல்வர் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை.

அன்றைய தினம் இதேப் போன்று மூன்று, நான்கு மெயில்கள் கெஜ்ரிவால் அலுவலகத்துக்கு வந்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கெஜ்ரிவாலின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்கவும் வேண்டும்.

குறிப்பாக, அவரின் மகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மெயில் வந்த பின்னர் கெஜ்ரிவாலோ, அவரது குடும்பத்தாரோ தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்கவில்லை. நாங்களாகவோ அவரின் மகளுக்குப் பாதுகாப்பு வழங்கியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா, குருக்ராமில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி, முதல் முறையாக துபாய்-க்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம்

இந்தியா
0

விஜய் 63 படத்தில் மீண்டும் ஒரு முக்கிய பிரபலம்! போடு அப்ப டாப் டக்கரு தான்

விஜய் 63 படம் மீதான எதிர்பார்ப்புகள் விஜய் ரசிகர்களுக்கு தொடங்கிவிட்டது. அட்லி இயக்கும் இந்த படத்தில் விஜய்

இந்தியா
0

திருமணமாகி குழந்தை இல்லை: வேறு நபருடன் மனைவிக்கு தொடர்பு.. நேர்ந்த விபரீதம்

இந்தியாவில் கள்ளக்காதலனால் இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை

இந்தியா
0

தமிழகத்தை உலுக்கிய சம்பவம்: ஹரிணியை கடத்திய வீரபாண்டியன் தற்கொலை முயற்சி

தமிழகத்தில் சிறுமி ஹரிணியை கடத்திய வீரபாண்டியன் பொலிசாருக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி…

இந்தியா
0

ஆணவக்கொலையின் உச்சக்கட்டம்: 16 வயது மகளின் மார்பகத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த தந்தை

பீகார் மாநிலத்தில் 16 வயது மகளை அவரது பெற்றோர் கொடூரமாக கொலை செய்துள்ளது அதிர்வலைகளை

1 2 3 4 259
WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com