கொழுகொழு குழ‌ந்தையா‌க்க வே‌ண்டா‌ம்

0

தங்களது குழந்தைகளை கொழுகொழுவென்று வளர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு ஊட்டச்சத்துகள் நிரம்பிய உணவு வகைகளை நிறைய ஊட்டி விடுவார்கள்.

இப்படி குழந்தைக்கு உணவை திணித்து வளர்த்தால், அந்த குழந்தைக்கு மரபு சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் வந்துவிடுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என்று எச்சரிக்கிறார்கள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

இ‌ப்படி செ‌ய்தா‌ல், நீரிழிவு நோய், கு‌ண்டான உட‌ல்வாகு, ர‌த்த அழு‌த்த‌ம் போ‌ன்ற பரம்பரை வியாதிகள் கொண்ட குடும்பத்தில் ‌பிற‌ந்த குழ‌ந்தைகளு‌க்கு‌ம் எளிதில் அந்த நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்கிறார்கள் அவர்கள்.

குழந்தைகளுக்கு உணவு ஊட்டி விடுவதில் பெற்றோர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். கொழுப்புச்சத்து நிறைந்த நெய், வெண்ணெய், வனஸ்பதி கொண்டு தயார் செய்த உணவுப் பொருட்கள், வறுவல்கள், ஐஸ்கிரீம்கள் போன்றவற்றை குழந்தைகளுக்கு அ‌திகமாக‌க் கொடுக்கக்கூடாது.

மற்ற சத்துணவு வகைகளையும் குழந்தைக்கு தேவையான அளவே கொடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டு வலுக்கட்டாயமாக உணவை திணிக்கக்கூடாது என்கிறார்கள் மரு‌த்துவ‌ர்க‌ள்

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com