Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

மாணவனுக்கு நீதி கோரி பாடசாலை மாணவர்களால் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

0

ஏறாவூர், சவுக்கடி இரட்டைப் படுகொலை சம்பவத்தில் உயிரிழந்த பி.மதுசான் என்ற மாணவனுக்கு நீதி கோரி பாடசாலை மாணவர்களால் மட்டக்களப்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொலையுன்ட குறித்த மாணவன் கல்வி கற்ற குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள், ஆசிரியர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலையில் இருந்து பேரணியாக முன்னெடுக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள சிறுவர் நன்நடத்தை அலுவலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

கொலையாளிகளை கைது செய்யக்கோரியும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன், பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Share.

Comments are closed.