Breaking News
மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை: கமலஹாசன்
ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்

0

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிப் பிரச்சினை மற்றும் மாணவர்களின் வகுப்புத் தடை நீக்குதல் தொடர்பான இரு கோரிக்கைகளைப் பிரதானமாக முன்வைத்து தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த செவ்வாய்கிழமை பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை (செனற்) முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இன்று வரை அக்கட்டிடத் தொகுதியினுள்ளேயே இருந்து வருகின்றனர்.

அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழக காவலாளிகளைத் தாக்கிய நிலையில் காவலாளி ஒருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி ஆர்ப்பாட்டம், முற்றுகை, மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 19 பேருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸ் நிலையம் மூலம் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குறிப்பிடப்பட்ட மாணவர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜராகும்படி அழைப்புக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share.

Comments are closed.