Breaking News
தொண்டர்களின் கருத்துகளை கேட்டு முடிவு தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் அறிவிப்பு
திருச்சி அருகே துவரங்குறிச்சியில் சசிகலா கொடும்பாவி எரிப்பு
புதுச்சேரி ரிசார்ட்டில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.க்கள் ‘தமிழக அரசியலில் அதிரடி முடிவுகள் இருக்கும்’ என பேட்டி
செப்டம்பர் முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும்அமைச்சர் விஜயபாஸ்கர்
சசிகலாவை பெங்களூர் எம்.ஜி. சாலையில் பார்த்த காங்கிரஸ் தலைவர் டிஐஜி ரூபா தகவல்
கொழும்பு அரசியல் களத்திலிருந்து அடுத்தடுத்து அகற்றப்படும் முக்கிய புள்ளிகள்!
டிடிவி தினகரன்- வைத்திலிங்கம் எம்பி ஆதரவாளர்கள் மோதல்: தஞ்சாவூரில் பதற்றம்
திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
சபாநாயகர் தனபாலை புதிய முதலமைச்சராக்க வேண்டும்- திவாகரன் பேட்டி
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை
தேர்தல் வெற்றிக்காக மதவாதத்தையும் தோற்றுவித்து அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையைப் பாழ்படுத்துகின்றார்கள்
விஜயதாஸ ராஜபக்சவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அமைச்சர் சரத் பொன்சேகா
யாழ்.நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படை முகாமில் ஆடம்பர விடுதி ஒன்று நிர்மாணம்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து முதல் அமைச்சரை மாற்ற கோரிக்கை
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
“மினி கூவத்தூர்”.. ஆதரவு எம்எல்ஏக்களை ஸ்டார் ஹோட்டலில் மொத்தமாக தங்க வைத்த தினகரன் குரூப்!!
சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு இன்று அறிவிக்கிறார்
பேரம் படிந்துவிட்டது… சேர்ந்துவிட்டார்கள்.. மக்களுக்கு என்ன பயன்?- குஷ்பு
ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரன் திட்டமிட வாய்ப்பு இல்லை: பொன்னையன்
அதிமுக இணைப்பு ஏமாற்றமளிக்கிறது.. ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஒரு அதிருப்திக் குரல்!
தோனி மாதிரியே கோலியும்… புல்லரிக்கும் புஜாரா!
புதிய கட்சி விரைவில் தொடக்கம்; ரஜினிகாந்த் கட்சியின் பெயர், கொடி, சின்னம் தயார் ஆகிறது?

சீனாவுக்கு எதிராக பொருளாதார போர் ; ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுப்பு

0

இந்திய – சீன எல்லைப்பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வடக்கு இந்தியாவின் கான்பூர் நகரில் நேற்று சீனாவுக்கு எதிராக பொருளாதார போர் தொடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ் ஆர்ப்பாட்டத்தில், சீன தயாரிப்பு பொருட்களை வாங்காமல் பொருளாதார போர்தொடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

மகாத்மா காந்தியால் கடந்த 1942ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், சீன தயாரிப்பு பொருட்களை வைத்திருப்பவர்கள், அவற்றை தூக்கியெறிய வேண்டும் என்றும் சீனாவுக்கு எதிராக போராடாத இந்தியர்கள் துரோகிகளாக கணிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்திலுள்ள துக்லம் பகுதியில் இரு நாடுகளும் தமது படைகளை குவித்துள்ள நிலையில், அங்கு போர்ச்சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

About Author

Comments are closed.