Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது

0

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டி, மழையால் 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது.

இதையடுத்துக் களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஜானி பேரிஸ்டோவின் சதத்தின் உதவியால் 30.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சர்வதேச ஒருநாள் போட்டிகளில், ஜானி பேரிஸ்டோவ் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இதன்மூலம், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, 2019-ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு நேரடியாகத் தகுதிபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கனவைத் தகர்த்தது.

Share.

Comments are closed.