Breaking News
மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை: கமலஹாசன்
ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்

நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்திற்காக நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் 500 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

0

நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்திற்காக நுவரெலியா மாவட்டத்திற்கு மாத்திரம் 500 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண அமைச்சர் எம் .ரமேஸ்வரன் தெரிவித்தார்.

நன்னீர் மீன் வளர்ப்புக்கு கிடங்கு வெட்டுவதற்கான காசோலை வழங்கும் நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தினூடாக தோட்டத் தொழிளாலர்களின் போசனை மட்டத்தினையும், வருமானத்தினையும் அதிகரிக்க முடியும் என ரமேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஸ்ரதன், விக்டன், கரோலிணா, டன்சினன், நயப்பன, மிஸ்டில் ஆகிய தோட்ட முகாமையாளர்களுக்கு நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தினை செயற்படுத்துவதற்காக 335 லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

இதேவேளை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ், பிலிப்குமார் உட்பட பலர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.