Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும்

0

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வவுனியா நகர பிரதேச செயலகத்தின் வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில், பிரதேச செயலாளர் கா.உதயராசா தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, 133 பயனாளிகளுக்கு சுயதொழில் உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், கால்நடைகள் போன்றவற்றை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வழங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கூறுகையில்,எமது அமைச்சினால் வவுனியாவில் இவ்வருடம் 549 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 678 வீடுகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, 35 பயனாளிகளுக்கு சிறு நீர்த்தாங்கிகளுக்கான அபிவிருத்தி திட்டம் , 49 பயனாளிகளுக்கு கல்வித்துறைக்கு என பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே எமது நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கமாகும்.

ஜனாதிபதியும், பிரதமரும் இவ்விடயங்களுக்காக எனக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் கருணாதாச, அமைச்சின் செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share.

Comments are closed.