Breaking News
மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை: கமலஹாசன்
ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்

சேர்பியாவில் கடும் வெப்பம்; பொதுமக்கள் அசௌகரியம்

0

முன்னெப்போதும் இல்லாத வகையில் சேர்பியாவில் கடும் வெப்பம் நிலவி வருவதாகவும் அதனால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேர்பியாவில் தற்போது 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது போன்ற கடும் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டிருப்பது சுமார் ஐந்து வருடங்களுக்கு பிறகே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

சேர்பிய தேசிய வானிலை ஆய்வு மையத்தின் நிபுணர் ஒருவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போது, ‘சேர்பியாவின் பல பகுதிகளில் 39 மற்றும் 40 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் சில பகுதிகளில் இது 41 மற்றும் 42 டிகிரி செல்சியஸ் ஆக பதியப்பட்டுள்ளது. குறித்த நிலைமை எதிர்வரும் வார இறுதி நாட்களிலும் தொடரும்’ என தெரிவித்தார்.

இந்நிலையில், பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.