Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

பிரித்தானிய பாராளுமன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கலந்துரையாடல்

0

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் 07/09/2017 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது.

இலங்கையில் தமிழீழ மக்களுக்கு எதிராக சிங்கள அரசினால் நடந்தப்பட்ட இனவழிப்பு போரில்
வலுக்கட்டாயமாக கடத்தி காணமல் ஆக்கப்பட்ட பல தமிழர்கள் யுத்தம் முடிவுற்று பல வருடங்களாகியும் இன்றும் அவர்களுக்கான நீதி கிடைக்காமல் காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் தமது உறவுகளை தேடி வருகிறார்கள்.

இவ்வாறான தருணத்தில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அவர்களது அன்பானவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை தெரிந்து கொள்ள எந்தவொரு அர்த்தமுள்ள உள்நாட்டு அல்லது சர்வதேச தீர்வுகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் வழங்கவில்லை.

மேலும், ஐ.நா. அமலாக்க மற்றும் சுயேச்சையாக காணாமல்போதல் தொடர்பான செயற்பாட்டு குழு நவம்பர் 2015 ல் இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர், இலங்கையில் இரண்டாவது மிகப்பெரிய காணாமல் போன சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஈழம் கடந்து புலம்பெயர் தேசத்திலும் தொடரும் நீதிக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்று முடிந்த கலந்துரையாடலில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், உலக பேச்சாளர்கள் மற்றும் தமிழ் மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பிந்திய பதிவு:

 

இது தொடர்பான மேலதிக செய்தி: http://www.tgte-homeland.org/international-disappearance-day-07-09-2017/

Share.

Comments are closed.