Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

விஜேதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தால், அதற்கு எதிராக வாக்களிக்கவும் தயார்

0

அமைச்சர் விஜேதாசவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டுவந்தால், அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பேரேரா தெரிவித்துள்ளார்.

றஹாலிஎல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியில் உள்ள பலர் ரவி கருணாநாயக்கவைப் போல் அமைச்சுக்களில் இருந்தும், நாடாளுமன்ற பதவிகளிலும் இருந்தும் இராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share.

Comments are closed.