Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

0

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பாக நேற்றுபுதன்கிழமை காலை 4 மணி முதல் மாலை 7 மணிவரை இடம்பெற்றிருந்தது.

கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்த ஒருதீர்க்கமான முடிவையும் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கவில்லை.

இதேவேளை கடும் மழையினையும் பொருட்படுத்தாது பெரும் திரளான பிரித்தானியா வாழ் புலம்பெயர் மக்கள் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடாத்திவரும் போராட்டங்களிற்கு வலுச்சேர்த்தமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.