Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

“கொஞ்சம் கொஞ்சம்” திரைப்படவிமர்சனம்

0

தமிழ் நாட்டைச் சேர்ந்த நாயகன் கோகுல் கேரளாவில் காயலான் [இரும்புக்கடை ஓனர்] அப்புக்குட்டியிடம் வேலை செய்கிறான். பக்கத்து தெருவில் அவன் காதலிக்க ஒரு மலையாள நாயகி சிக்குகிறது.

நாயகன் கோகுலின் அம்மா இறந்து போகிறார். அக்காவுக்கு செல்போன் வெடித்து காது கேட்காமல் போக  கல்யாணம் தடைப்படுகிறது. அக்காவை கூட்டிக் கொண்டு கேரளா போறான். செய்யாத தப்புக்கு கேரள போலீஸிடம் மாட்டுகிறான். தன் காதலியைக் கைப்பிடிக்க வேண்டும், அக்காவுக்கு காது சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதற்காக நேர்மையை விட்டுக் கொடுப்பதாகவும் இல்லை.

இந்த நிலையில் அவன் என்ன முடிவு செய்வான், அக்கா திருமணம் முடிந்த்தா? இலனலையா? காதலியை கைப் பிடித்தானா? என்பதே மீதி கதை. ‘விருந்தாளி’ படத்தை இயக்கியவர்தான்  இப்படத்தின் இயக்குனர்.  உதய் சங்கரன், மன்சூர் அலிகான் நடிப்பு சூப்பர். அத்தனை பேரும் கதைக்குள் அழகாக பொருந்துகிறார்கள்.

பொள்ளாச்சி மற்றும் கேரளத்தின் அழகை  ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவு சூப்பர். இவர் கேவி. ஆனந்திடம் உதவியாளராக இருந்தவராம்.

Share.

Comments are closed.