Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

கொரிய நெருக்கடியை எதிர்கொள்ள கூட்டு பயிற்சியிலோ அல்லது இராணுவ நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது; ஜெரமி கோர்பின்

0

வடகொரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் பங்குபெறுவது தொடர்பில் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்தை தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் எச்சரித்துள்ளார்.

பிரித்தானிய ஊடகமொன்றுக்கு எழுதிய கட்டுரையொன்றிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முழு உலகின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கே அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கொரிய நெருக்கடியை எதிர்கொள்ள கூட்டு பயிற்சியிலோ அல்லது இராணுவ நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

வடகொரிய நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வை எட்டுவதற்கு லண்டன் வொஷிங்டனுடன் இணைந்து செயற்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜொன்சன் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே ஜெரமி கோர்பின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Share.

Comments are closed.