Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

மலையகத்தில் கொட்டகலை, பாலத்தின் ஊடான ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

0

மலையகத்தில் கொட்டகலை, 60 அடி பாலத்தின் திருத்த பணிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இன்று குறித்த பாலத்தின் ஊடான ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பரீட்சார்த்த ரயில் இன்றைய தினம் காலை 11.00 மணியளவில் பாலத்தினூடாக செலுத்தப்பட்டு உறுதிசெய்ததன் பின் திருத்த வேலைகள் நிறைவடைந்து இந்த பாலத்தின் ஊடாக பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமும், கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதமும் பயணித்ததை தொடர்ந்து இந்த புகையிரத பாலத்தின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன.

கொழும்பு – பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் கொட்டகலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் 110 ஆவது மைல் கட்டைப் பகுதியில் கடந்த 13 ஆம் திகதி அதிகாலை இரண்டு மணியளவில் புகையிரதப் பெட்டிகள் நான்கு தடம் புரண்டு விபத்துக்கு உள்ளாகியன.

இந்த விபத்தில் புகையிரத பெட்டிகளுக்கும் தண்டவாளங்களுக்கும் 60 அடி பாலத்திற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

கடந்த ஆறு நாட்களாக இரவு பகலாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஈடுபட்டு அதனை சீர் செய்ததை தொடர்ந்து இந்த பாலத்தின்ஊடாக பரீட்சாரத்த புகையிரதம் ஒன்று அனுப்பி சோதனை செய்த பின் புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Share.

Comments are closed.