Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

மகளிர் மட்டும் – திரைப்படவிமர்சனம்

0

ஜோதிகா டிஸ்கவரி சேனலில் வேலை செய்கிறார். வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொள்ளும் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி ஒரு ஆவணப் படத்தை எடுக்கிறார். அதில் பெண்கள் படும் கஷ்டத்தையும் வேதனையும் உணர்கிறார். இந்நிலையில், தான் திருமணம் செய்து கொள்ளும் காதலனின் தாயான ஊர்வசி வீட்டில் திருமணத்திற்கு முன்பே தங்குகிறார்.

காதலன் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் ஊர்வசிக்கு துணையாக தங்குகிறார். இந்நிலையில், ஊர்வசியிடம் மிகவும் சகஜகமாக பேசி நட்பாக பழகி வருகிறார் ஜோதிகா. ஊர்வசி அவரது பள்ளிப் பருவத்தில் விடுதியில் தங்கி படித்ததாகவும், தன்னுடன் பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகிய இரண்டு தோழிகள் இருந்ததாகவும் கூறுகிறார்.

மேலும் ஒரு பிரச்சனையில் மூன்று பேரும் பிரிந்து விட்டதாகவும் கூறி வருத்தப்படுகிறார். இதை கேட்ட ஜோதிகா, பேஸ்புக் மூலம் பிரிந்த நண்பர்களை தேடி கண்டுபிடித்து, பிரிந்த அதே தேதியில் ஒன்று சேர்க்க ஆசைப்படுகிறார். பானுப்பிரியா, சரண்யாவை கண்டுபிடித்த ஜோதிகா, அவர்கள் இருவரும் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழவில்லை என்று அறிகிறார். இவர்களுடைய வாழ்க்கையை வாழவில்லை என்றும் அறிகிறார். இதையடுத்து இவர்கள் மூன்று பேரையும் அழைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ வெளியூருக்கு அழைத்து செல்கிறார்.

இறுதியில், பானுப்ரியா, சரண்யாவை பிரிந்த குடும்பத்தினர்கள், அவர்களின் அருமையை புரிந்துக் கொண்டார்களா? மனம் மாறி அவர்களுக்கு உண்டான மரியாதையை கொடுத்தார்களா? அனைவரும் ஒன்று சேர்ந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஜோதிகா, துறுதுறுப் பெண்ணாகவும், நிருபராகவும் நடித்து மனதை கவர முயற்சித்திருக்கிறார். ஊர்வசி, படத்தில் முக்கியமான கதாபாத்திரம். தனக்கே உரிய வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குறிப்பாக மாணவர்களுக்கு டியூசன் எடுக்கும் போது, மாணவர்களிடையே லாவகமாக பேசி டியூசன் பீஸ் வாங்குவது போன்ற காட்சியில் கைத்தட்டல் வாங்குகிறார். பானுப்ரியா, அரசியல்வாதி நாசருக்கு மனைவியாக நடித்திருக்கிறார். ஒரு குடும்பப் பெண்ணாக தன் குடும்பத்திற்காக வாழ்வது என நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். தன் மகன் மனம் திருந்தி வருந்தும் காட்சியிலும், அவனை சமாதானம் செய்யும் காட்சியிலும் அவரது நடிப்பு சிறப்பு.

சரண்யா பொன்வண்ணன், கொடுத்த வேலையை சிறப்பாக செய்பவர். அதே போல் இந்த படத்தில் அவரது பகுதியை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக, கணவனை நினைத்து புலம்பும் காட்சியில் அருமை. மாதவன், ஜோதிகாவின் காதலன். இறுதி காட்சியில் மட்டுமே வருகிறார். 15 நிமிடமே வந்தாலும் இவர் வந்த பிறகுதான் படம் முழுமை அடைந்திருக்கிறது. இந்த 15 நிமிடம்தான் படத்திற்கு பலம்.

Share.

Comments are closed.