Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

எதென்சை அண்மித்த கிராமமொன்றில் பரவிய காட்டுத்தீயில் பல வீடுகள் சேதம்

0

கிரேக்க தலைநகர் எதென்சை அண்மித்த கிராமமொன்றில் பரவிய காட்டுத்தீயில் பல வீடுகள் சேதமடைந்ததுடன், மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுவதற்கு தூண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதென்சின் வடகிழக்கே சுமார் 45 கிலோமீற்றர் தொலைவில் கடலோர பிரதேசத்தில் பரவிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் 150இற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தீ பரவலினால் இதுவரை எவருக்கும் பாதிப்பில்லை எனத் தெரிவித்த தீயணைப்பு அதிகாரிகள், ஆனால், வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகக் தீயணைப்பு படை அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த 2007ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் சுமார் 70இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com