நாடாளுமன்றத்திற்கு கூட்டு எதிர்க்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் சைக்கிளிலும், மாட்டு வண்டியிலும் வருகை

0

நாடாளுமன்றத்திற்கு நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர்கள் சைக்கிளிலும், மாட்டு வண்டியிலும் வருகை தந்திருந்தனர்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் வரவு – செலவு திட்டத்தின் மீதான வாசிப்பு இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில் அவர்கள் நாடளாவிய ரீதியல் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை சுட்டிக்காட்டுவதற்காகவே இவ்வாறு நாடாளுமன்றத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டியில் வருகை தந்த புகைப்படங்கள் வைரலாகியிருந்தன.இவ்வாறான சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த உள்ளிட்ட சிலர் சைக்கிளில் செல்ல அவர்களின் பின்னால் இராணுவத்தின் அதிரடிப்படை வீரர்கள் ஓடிய புகைப்படங்கள் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com