Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

வவுனியாவில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை சந்தித்தார்; எம்.கே.சிவாஜிலிங்கம்

0

வவுனியாவில் சுழற்சிமுறை உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சந்திந்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும், அதற்கான போராட்டம் தொடர்பாகவும் அவர் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது காணாமல் போன உறவுகள், தாம் எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினருக்கு எடுத்து கூறியுள்ளதாகவும் காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினர் சுமார் 170 ஆவது நாளாக இங்கு சுழற்சிமுறை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.