Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

இரா.சம்பந்தனை வடக்கு கிழக்கிற்கு வெறும் கையுடன் அனுப்ப வேண்டாம்; அமைச்சர் மனோ கணேசன்

0

எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை வடக்கு கிழக்கிற்கு வெறும் கையுடன் அனுப்ப வேண்டாம் என அமைச்சர் மனோ கணேசன் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

அரசியலமைப்புச் சபையின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,தமிழர் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என அன்று தந்தை செல்வா கூறியதனை போன்று, அனைத்து இலங்கையர்களையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என இரா.சம்பந்தன் கூறும் நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் மனோ கணேசன் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

தமிழர்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுக்கப்பதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம்.மேலும், தனி இராஜ்ஜிய கொள்கையில் இருந்த தமிழர் ஒருவர், ஒன்றிணைந்த நாட்டின் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டமை சிறந்ததொரு நிலைமை.புதிய ஒரு அரசியலமைப்பு கொண்டுவருவதற்கான தேவை என்ன? இந்த நாட்டில் வாழும் பிரதான இரண்டு இனங்கள் மத்தியில் ஒருவரை நோக்கி ஒருவருக்கு சந்தேகங்கள் இருக்கின்றன.

அச்சங்கள் இருக்கின்றன. சிங்கள மக்களின் அச்சம் என்ன? தமிழர்கள் மீண்டும் தனியொரு ஈழநாட்டை நோக்கி பயணிப்பார்களா என்றும், தம் அரசியல் இலக்கை அடைய ஆயுத போரை ஆரம்பிப்பார்களா என்ற அச்சங்கள் சிங்கள மக்கள் மத்தியில், சிங்கள அரசியல் கட்சிகள் மத்தியில் உள்ளன.

இவை மிக நியாயமான அச்சங்கள். அதேபோல், தமிழ் மக்கள் மத்தியில் இரண்டு அச்சங்கள் உள்ளன. ஒன்று, இந்த நாடு முழுக்க முழுக்க சிங்கள பெளத்த நாடாக மாற்றப்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது. அடுத்தது, இந்த நாட்டில் அதிகாரம் பகிர்ந்து வழங்கப்படாமல், தாம் ஏமாற்றப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் இருக்கின்றது. இவையும் மிகவும் நியாயமான அச்சங்கள். இவற்றை சிங்கள மக்களும், கட்சிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

இங்கே எனக்கு முன் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தான் கொள்கை அடிப்படையில் அதிகார பகிர்வுக்கு உடன்படுவதாக கூறினார். தேசிய ஐக்கியத்தை விரும்புவதாக கூறினார். இந்த கருத்துகளை நான் வரவேற்கிறேன்.இன்று இங்கே சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். அதுபற்றி நான் ஒன்றை கூறவேண்டும். இலங்கை நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை, ஏற்றுகொண்டதன் மூலம், சம்பந்தன் இன்று இலங்கை நாட்டு வியூகத்துக்குள் வந்துவிட்டார்.

அதன்மூலம், தனிநாடு என்ற வியூகத்தை கைவிட்டு விட்டார். இது சிங்கள மக்களுக்கு இதன்மூலம் அவர் வழங்கியுள்ள நல்ல ஒரு செய்தியாகும். இதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புரிந்துக்கொள்ள வேண்டும். இனிமேல் இங்கே இல்லாததை சொல்லி நாட்டை குழப்புவதை விட்டுவிட்டு நாம் தேசிய ஐக்கியத்தை நோக்கி பயணிக்க வேண்டும். என்று தெரிவித்தார். 

Share.

Comments are closed.