Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

இதைப் படித்தால் இனி நகத்தைக் கடிக்க மாட்டீங்க!

0

வயிற்று வலியால் மருத்துவனைக்கு சிகிச்சை பெற வந்தவரின் உடலில் 130 கிராம் நகங்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.

கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோபர்கங்காவைச் சேர்ந்த 48 வயதான நோயாளி ஒருவர் சிகிச்சை பெற வந்திருக்கிறார். ஸ்கிசோஃப்ரினிக் என்ற கற்றல் குறைபாடு நோய் கொண்ட அவர் அடிக்கடி நகத்தைக் கடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார். இதனால், நீண்ட நாட்களாக வயிற்று வலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் துடித்து மருத்துவமனை வந்த அவரது வயிற்றில் எண்டோஸ் கோப்பி சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. இதில், அவரது வயிற்றில் நிறைய நகத்துணுக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

உடனே அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கடும் போராட்டத்திற்குப் பிறகு காந்தத்தின் உதவியுடன் 639 நகத்துணுக்குகளை வெளியே எடுத்துள்ளனர்.

பெரும்பாலும் ஒவ்வொரு நகத்துணுக்கும் 2 இன்ச் அளவுக்கு பெரியதாகவும் கூர்மையாகவும் இருந்ததாகவும் குடலின் இடத்தையே சற்று நகர்த்தவிட்டு 130 கிராம் எடை கொண்ட இந்த நகத்துணுக்குகள் வயற்றை அடைத்துக்கொண்டு இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.

Comments are closed.