Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை சமாளிப்பது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையில் தொலைபேசி உரையாடல்

0

கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை சமாளிப்பது தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த உரையாடலின் போது ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியாவின் ஸ்திரமற்ற தன்மை மற்றும் ஆபத்தான நடவடிக்கைகள் காரணமாக அதிகரித்துவரும் பதற்றங்களை எதிர்கொள்வது தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வடகொரியா தனது சர்வதேச கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஜனாதிபதி மக்ரோங் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் அணுவாயுத அச்சுறுத்தல்களால் மக்ரோங் கவலை அடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இந்த விவகாரத்தில் உலக தலைவர்களின் பேச்சுவாரத்தை அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share.

Comments are closed.