Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

பிச்சுவா கத்தி – திரைப்படவிமர்சனம்

0

ஊர் சுற்றும் இளைஞன் இனிகோ, அவனுக்கு சில வெட்டி நண்பர்கள்.  அந்த கிராமத்தில் ஒருத்தியை அவன் காதலிக்கிறான், காதலை கொண்டாடும் சந்தோஷத்தில்  நண்பர்களுடன் குடிக்க, மது போதாத நிலையில் ஆடு ஒன்றை திருடுகிறான்  என்பதில் தொடங்குகிறது  கதை,  ஆட்டை கொண்டு போகும் வழியில் விவசாயிகளிடம் சிக்கி, போலீஸ் வந்து, கோர்ட்டில் அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு மாசம் கையெழுத்துப் போடச் சொல்கிறது கோர்ட். அந்த போலீஸ் ஸ்டேஷனில் உள்ள இன்ஸ்பெக்டருக்கு கப்பம் கட்டுவதற்காக, ஒரு பெண்ணிடம், சங்கிலி அறுக்க முயல, போலிஸ் ஜீப்வர, மீண்டும் சிக்குகிறான்.  பின்னர்  நடந்தது என்ன என்பதே மீதி கதை.

பொதுவாக குற்றவாளியை போலீஸ் ஸ்டேஷனில் கையுழுத்துப் போடச் சொல்ல அவன் போடுவதோடு அந்த சமாச்சாரம் முடித்து வைக்கப்படும் ஆனால் அப்படி கையெழுத்துப் போடும்போது கூட எப்படி பிரச்னைகள் வரலாம் என்று சொன்ன வகையில் பாராட்டுப் பெறுகிறது படம். இனிகோ பிரபாகர், பிரியங்கா, செங்குட்டுவன், அனிஷா எல்லாருமே இயல்பாக நடித்துள்ளனர். மொத்த்தில்  பிச்சுவா கத்தி கூர்மை

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com