ரிச்சி திரைப்படவிமர்சனம்

0
பத்திரிகையாளராக இருக்கும் ஷ்ரதா, தன்னுடைய முயற்சியால் ஒரு கொலை பற்றிய செய்தியை எழுதுகிறார். ஆனால், உயர் அதிகாரிகள் அதை பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரண செய்தியாக வெளியிட்டு விடுகிறார்கள். இதனால், கோபப்படும் ஷரதா, இந்த கொலையின் முக்கியத்துவத்தை விவரிக்கிறார். இந்த கொலையின் பின்னணியில் பெரிய ரகசியம் இருக்கிறது. இதைப்பற்றி பெரிய கட்டுரை எழுத போவாத சொல்லி, தூத்துக்குடி செல்கிறார் ஷரதா.
 
அங்கு நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. நிவின் பாலி, நட்ராஜ், ராஜ் பரத் ஆகியோரின் கோணத்தில் அந்த கொலை எப்படி நடந்தது என்பதை விசாரிக்கிறார். இறுதியில் அந்த கொலையின் பின்னணி நடந்தது என்ன? ஷ்ரதா அதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
2014ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘உலிதவரு கண்டந்தே’ படத்தின் ரீமேக்காக ‘ரிச்சி’ உருவாக்கி இருக்கிறார்கள். மணப்பாடு லோக்கல் ரௌடியாக அசத்தியிருக்கிறார் நிவின் பாலி. வெற்றிலை வாய், பிஸ்டல் பவுச்சுடன் இணைந்த போலீஸ் பெல்ட், வித்தியாசமான நடை என நிவின் பாலி ரௌடிக்கான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். நட்ராஜ் இந்தப் படத்தில் படகு மெக்கானிக்காக தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒருதலையாகக் காதலிக்கும் லட்சுமி பிரியாவிடம் எப்படியாவது காதலை ஏற்க வைக்க முயற்சிப்பதும், கடைசி வரை காதலைச் சொல்லாமல் சாகிற காட்சி என அசத்தியிருக்கிறார். 
 
 
Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com