Breaking News
மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை: கமலஹாசன்
ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்

“சுற்றாடல் புனிதமானது” என்ற வேலைத்திட்டத்திற்கு அமைய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

0

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் “சுற்றாடல் புனிதமானது” என்ற வேலைத்திட்டத்திற்கு அமைய மத்திய மாகாணத்தில் நடைமுறைப்படுத்தும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நுவரெலியா பிரதேச சபையின் ஊடாக சிரமதானப் பணிகள் இன்று நடைபெற்றது.

இந்த வேலைத்திட்டம் கொட்டகலை வைத்தியசாலை பகுதியிலிருந்து, பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரி வரை நடைபெற்றன.

இதன்போது, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் இருமருங்கில் உள்ள வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டதுடன், பத்தனை ஸ்ரீபாத கல்வியல் கல்லூரி வளாகப் பகுதிகளிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த சிரமதான பணிகளுக்கு பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் மாணவ, மாணவிகள், நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர், அதிகாரிகள், சுகாதார பரிசோதகர் என பலரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.