இதற்காக தான் முக்கிய வீரர்கள் ஓய்வளிக்கப்பட்டார்களா? இந்திய அணி தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்கள்

0

ஆசிய கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதிய போட்டி சமநிலையில் முடிந்துள்ளது.

இந்தியா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் ஷிகர் தவான், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இதனால் டோனி கேப்டனாக பொறுப்பேற்றார், ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக பொறுப்பேற்கும் 200-வது போட்டி இதுவாகும்.

இதன்மூலம் 200 போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டோனி கடைசியாக 2016-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கேப்டனாக பணியாற்றினார்.

அதன்பின் தற்போது 696 நாட்கள் கழித்து கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

எம்எஸ் டோனி தலைமையில் இந்தியா 199 போட்டிகளில் விளையாடி 110-ல் வெற்றியை ருசித்துள்ளது.

74 போட்டியில் தோல்வியும் சந்தித்துள்ளது. 4 போட்டிகள் ‘டை’யில் முடிந்துள்ளன. 11 போட்டிகள் எந்தவித முடிவையும் சந்திக்கவில்லை.

இன்று கத்துக்குட்டி அணியான ஆப்கானிஸ்தான் உடன் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி ஆட்டத்தை சமநிலைப்படுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த போட்டியில் ரோகித் தவான் போன்ற முக்கிய வீரர்களுக்க ஓய்வளிக்கப்பட்டிருந்தது இதன்மூலம் டோனி 696 நாட்களுக்கு பின் அணித்தலைவராக 200 ஆவது போட்டியில் விளையாடியிருந்தார்.

டோனியின் இந்த சாதனைக்காக தான் முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

Share.

Comments are closed.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com