Breaking News
‘மொட்டில்’ வென்றவர்களுக்கு மஹிந்த அறிவுரை
‘தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் இன அழிப்புக்கு இணையானது’

சவேந்திர சில்வா தொடர்பில் யஸ்மின் சூக்காவின் குற்றச்சாட்டை இலங்கை இராணுவம் கண்டித்துள்ளது

0

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஆராய்ந்த ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுஉறுப்பினர் யஸ்மின் சூக்கா, இலங்கையின் இராணுவ அதிகாரி ஒருவர் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்தை இலங்கை இராணுவம் கண்டித்துள்ளது.

இறுதிப்போர்க்காலத்தில் போர்க்குற்றம் புரிந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிவதிவிட பிரதிநிதியாக செயற்பட்டநிலையில் தற்போது இலங்கை திரும்பியுள்ளார்.

அவர் கஜபா ரெஜிமென்ட்டின் அதிகாரியாக செயற்படுகிறார்.இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், அநுராதபுர சாலியபுரயில் கஜபா ரெஜிமென்ட்டின் நிகழ்வு ஒன்று இடம்பெற்றபோது, அதற்கு முன்னி மென்பான நிறுவனமொன்று நிதியளிப்பு செய்திருந்தது.

இதனையடுத்து யஸ்மின் சூக்கா, குறித்த நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.இதில் போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வா, அங்கம் வகிக்கும் ஒரு இராணுவப்பிரிவுக்கு நிதியளித்த செயல் தொடர்பில் யஸ்மின் சூக்கா குற்றம் சாட்டியிருந்தார். அவரின் இக்குற்றச்சாட்டையே இலங்கை இராணுவம் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com