Breaking News
தொண்டர்களின் கருத்துகளை கேட்டு முடிவு தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் அறிவிப்பு
திருச்சி அருகே துவரங்குறிச்சியில் சசிகலா கொடும்பாவி எரிப்பு
புதுச்சேரி ரிசார்ட்டில் டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.க்கள் ‘தமிழக அரசியலில் அதிரடி முடிவுகள் இருக்கும்’ என பேட்டி
செப்டம்பர் முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும்அமைச்சர் விஜயபாஸ்கர்
சசிகலாவை பெங்களூர் எம்.ஜி. சாலையில் பார்த்த காங்கிரஸ் தலைவர் டிஐஜி ரூபா தகவல்
கொழும்பு அரசியல் களத்திலிருந்து அடுத்தடுத்து அகற்றப்படும் முக்கிய புள்ளிகள்!
டிடிவி தினகரன்- வைத்திலிங்கம் எம்பி ஆதரவாளர்கள் மோதல்: தஞ்சாவூரில் பதற்றம்
திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
சபாநாயகர் தனபாலை புதிய முதலமைச்சராக்க வேண்டும்- திவாகரன் பேட்டி
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது இருதய மாற்று சத்திர சிகிச்சை
தேர்தல் வெற்றிக்காக மதவாதத்தையும் தோற்றுவித்து அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையைப் பாழ்படுத்துகின்றார்கள்
விஜயதாஸ ராஜபக்சவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் உடனடியாகப் பதவி விலக வேண்டும்; அமைச்சர் சரத் பொன்சேகா
யாழ்.நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படை முகாமில் ஆடம்பர விடுதி ஒன்று நிர்மாணம்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து முதல் அமைச்சரை மாற்ற கோரிக்கை
பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை
“மினி கூவத்தூர்”.. ஆதரவு எம்எல்ஏக்களை ஸ்டார் ஹோட்டலில் மொத்தமாக தங்க வைத்த தினகரன் குரூப்!!
சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: திருநாவுக்கரசர்
ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் டிரம்ப் புதிய முடிவு இன்று அறிவிக்கிறார்
பேரம் படிந்துவிட்டது… சேர்ந்துவிட்டார்கள்.. மக்களுக்கு என்ன பயன்?- குஷ்பு
ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரன் திட்டமிட வாய்ப்பு இல்லை: பொன்னையன்
அதிமுக இணைப்பு ஏமாற்றமளிக்கிறது.. ஓ.பி.எஸ். அணியிலிருந்து ஒரு அதிருப்திக் குரல்!
தோனி மாதிரியே கோலியும்… புல்லரிக்கும் புஜாரா!
புதிய கட்சி விரைவில் தொடக்கம்; ரஜினிகாந்த் கட்சியின் பெயர், கொடி, சின்னம் தயார் ஆகிறது?

பத்திரிகையாளர்களை சந்தித்த சூரி

0

சூரி முதன் முதலில் தனிப்பட்ட வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார்.  “1996ஆம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தேன்.

ஆனால் சென்னையில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் பணம் தேவைப்பட்டது. அதனால்  சினிமாவில் அரங்குகள் அமைக்கும்போது பெயின்ட் அடிக்கும் பணிக்குச் சென்றேன். அப்போது சென்னையில் நண்பர்களுடன் இணைந்து காமெடி நாடகங்கள் போடுவேன்.

வீரப்பன் கதையை மையமாக வைத்து நாடகம் போட,  அதைப் பார்த்த காவல்துறையினர் 400 ரூபாய் பரிசாக அளித்துப் பாராட்டினார்கள். ‘காதல்’, ‘தீபாவளி’ படங்களில் சில காட்சிகளில் நடித்தேன். அஜித் சாருடன் ‘ஜி’ படத்தில் ஒரு காட்சியில் வருவேன். ‘தீபாவளி’ படத்தில் உதவி இயக்குநராக இருந்த சுசீந்திரன் சார் ‘வெண்ணிலா கபடி குழு’ படம் இயக்கியபோது எனக்கு வாய்ப்பு கொடுத்தார். முதலில் சிறுவேடமாக இருந்ததை, பின்னர் சில காட்சிகள் இணைத்து பெரிய கதாபாத்திரமாக உருவாக்கினார். அப்படத்தில் வரும் புரோட்டா காமெடியால் மக்களிடம் வரவேற்புப் பெற்றேன்.

நான் நடித்த படங்களில் என் மனைவிக்கு ‘வெண்ணிலா கபடி குழு’ படம் மிகவும் பிடிக்கும். என் குழந்தைகளுக்கு ‘அரண்மனை 2’ படத்தின் காமெடி மிகவும் பிடிக்கும். சமீபத்தில் வந்த புஷ்பா புருஷன் காமெடி, புரோட்ட காமெடியை பின்னுக்கு தள்ளிவிட்டது. நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் டூயட் பாடல் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டுமே. மற்றபடி எனக்கு நாயகனாக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் துளியுமில்லை.

இன்னும் காமெடியனாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. காமெடி வண்டியே நல்லபடியாக ஒடிக் கொண்டிருக்கிறது.  படப்பிடிப்பு தளத்தில் மட்டுமன்றி டப்பிங், மிக்ஸிங் உள்ளிட்ட பணிகளுக்கு இடையே காமெடியை மெருக்கேற்றுவது என் பாணி. இப்போது சில நண்பர்கள் எனது காமெடி காட்சிகளுக்கு உதவுகிறார்கள். என் காமெடிக்கு முன்னோடி என்றால் எங்கப்பாதான். அவரின் காமெடியில் இன்னும் 10 சதவீதத்தைகூட நான் சினிமாவில்  செய்யவில்லை. அவர் அப்படியொரு காமெடி மன்னன்.

சினிமாவுக்கு வந்த காலத்தில் பசி கடுமையாக இருக்கும், பணம் இருக்காது. இப்போது ஆண்டவன் புண்ணியத்தில் பணம் இருக்கிறது. ஆனால், இஷ்டப்பட்டதை சாப்பிட முடியவில்லை. ஏனென்றால் ஒரு நடிகருக்கு உடம்பு மிகவும் முக்கியம். உடம்பை கட்டுக் கோப்பாக வைத்திருந்தால் மட்டுமே 10 ஆண்டுகளுக்கு நாயகனுக்கு நண்பனாக நடிக்க முடியும்.

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். எனக்குக் குடும்பப் பாசம் அதிகம். என்னுடன் பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர்.  இப்போது என்னுடைய பையன் ஆங்கிலப் பள்ளியில் படித்து பெரிய ஆளாக வர, என்னுடைய தம்பி மகன்களோ, அண்ணன் மகன்களோ அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்து சின்ன ஆளாகிப் போனால் நமக்கு மனசு தாங்காது. எல்லாரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான்.

இப்பவும் வீட்ல எல்லா பிள்ளைகளும் எங்களை அப்பான்னுதான் கூப்பிடும். சூரி அப்பா, கண்ணன் அப்பா என்றுதான் அழைப்பார்கள்.  இந்த உறவு இப்படியே தொடரணும்னுதான் நான் நினைக்கிறேன். அதனால்தான் நான் சம்பாதிக்கிற பணத்துல 100 ரூபா என் பிள்ளைகளுக்கு சேர்த்து வைச்சா, 50 ரூபாயாவது அவங்களுக்கும் சேர்த்து வைக்கணும்னு நினைக்கிறேன். இப்போ அதைத்தான் செஞ்சுக்கிட்டிருக்கேன்..” என்றார் .

Share.

About Author

Comments are closed.