Browsing: Economic war

இந்தியா
0

சீனாவுக்கு எதிராக பொருளாதார போர் ; ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுப்பு

இந்திய – சீன எல்லைப்பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வடக்கு இந்தியாவின் கான்பூர் நகரில் நேற்று சீனாவுக்கு எதிராக பொருளாதார போர் தொடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில், சீன தயாரிப்பு பொருட்களை வாங்காமல் பொருளாதார போர்தொடுக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். மகாத்மா காந்தியால் கடந்த 1942ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.