Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

0

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் இன்று ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தியுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்னால் நடத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் டினேஷ்காந்த் தெரிவிக்கையில்,இலங்கையின் சிறைகளில் பல இடங்களிலே தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இவர்கள் தொடர்பாக எந்த விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் நல்லாட்சி அரசு எடுப்பதாகத் தெரியவில்லை.வவுனியால் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக அரசும், தமிழ்த் தலைமைகளும் பாராமுகமாகவே இருந்து வருகின்றன.

இதனைக் கண்டித்தும், தமிழ் அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.