Breaking News
மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை: கமலஹாசன்
ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்

தெஹ்ரான் உலக நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க மறுத்தால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

0

தெஹ்ரான் உலக நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க மறுத்தால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் ஈரானிய ஒப்பந்தமே,இதுவரை கண்டிராத மிக மோசமான ஒப்பந்தமாகும் எனக்குறிப்பிடட அவர் இந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் செயற்படுமாயின் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதியாக பதவியேற்ற ஆறு மாதத்திற்குள், தேர்தல் காலத்தில் வழங்கிய சட்டவிரோத குடியேற்றங்களை தடுத்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்கல் மற்றும் சுகாதார சீர்த்திருத்தங்கள் போன்ற பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும் இதற்கு முன்னர் பெரும்பாலும் எந்தவொரு தலைவரும் இவ்வாறு குறுகிய காலத்திற்குள் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.

Comments are closed.