Breaking News
ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி  
ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா சென்னை வருகை

மட்டக்களப்பு, மகிழடித்தீவில் உயிர் நீத்தவர்களின் நினைவுத் தூபி புனரமைப்பு

0

மட்டக்களப்பு, மகிழடித்தீவில் 2007ஆம் ஆண்டு சேதமாக்கப்பட்ட, உயிர் நீத்தவர்களின் நினைவுத் தூபியை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து புனரமைத்து புதுப் பொலிவுறச் செய்யும் வேலைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் மகிழடித்தீவு சந்தியில் பெயர்களடங்கிய நினைவுத்தூபி அமைக்கப்பட்டு தொடர்ச்சியாக படுகொலைச் சம்பவம் நினைவு கூரப்பட்டுவந்தது.

இந்நிலையில் 2007ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டம் படை நடவடிக்கை மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டபோது இந்த நினைவுத்தூபி சேதமாக்கப்பட்டு தற்போது புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share.

Comments are closed.