Breaking News
மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை: கமலஹாசன்
ஆர்.கே.நகர்இடைத்தேர்தல் தேதி அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு
நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்

லண்டனில் நிலத்தடி அஞ்சல் ரயில் சேவை கடந்த பதினான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பம்

0

லண்டனில் நிலத்தடி அஞ்சல் ரயில் சேவை கடந்த பதினான்கு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.

குறித்த ரயில் சேவையானது சுற்றுலா பயணிகளுக்காக எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1927ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த ரயில் சேவையானது, உலகில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் ரயில் சேவை என்ற பெருமையை கொண்டிருந்தது.

சாரதியற்ற குறித்த ரயில்களானது, லண்டனிலுள்ள முக்கிய அலுவலகங்களுக்கு பொதிகள் மற்றும் கடிதங்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

மேற்கு லண்டனிலிருந்து கிழக்கு லண்டனுக்கான 6.5 மைல் தூர குறித்த ரயில் சேவையானது பின்னர், கடந்த 2003ஆம் ஆண்டு மூடப்பட்டது.

இந்நிலையில், தற்போது பதினான்கு ஆண்டுகளின் பின் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள ரயில் சேவையானது, முதன்முறையாக சாரதிகளை கொண்டு இயக்கப்படவுள்ளதுடன், பயணிகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.