Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

எனது அப்பா எங்கே ஜனாதிபதி மாமா? என்ற சிறுமியின் கண்ணீருக்கு அரசாங்கத்தின் பதில் என்ன?

0

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமது உறவுகளின் வெளிப்படுத்தலைக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உரிய பதிலை இதுவரையில் அரசாங்கமோ உரிய தரப்பினரோ முன்வைக்காத நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டங்களும் அவர்களின் வேதனைகளும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது.

தமது பிள்ளைகளை, கணவனை, தந்தையரைத் தேடும் இந்த உறவுகளின் கண்ணீர்க் கதைக்கு முடிவுரை எழுதுவார் யாரோ என்ற நிலையில் அண்மையில் ஒரு சிறுமியின் அழுகை காண்போரைக் கண் கலங்க வைத்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தனது அப்பாவை காண சிறுமி கண்ணீர் மல்க ஜனாதிபதியிடம் எனது அப்பா எங்கே ஜனாதிபதி மாமா? என கண்ணீர் விட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நோக்கி குறித்த சிறுமி தனது அப்பாவை விடுவிக்குமாறு உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளமை அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

அது மட்டுமன்றி காணாமல் போனோரின் விடயத்தில் அரசின் ஆமை வேகத்தையும், தமிழ் பிரதிநிதிகளின் இயலாமையை விமர்சிப்பதாகவும் அரச தலைவர்களின் அசமந்தப் போக்கை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.

இதேவேளை, காணாமல் போனோரின் உறவுகள் நாட்டின் பொறுப்புள்ள பதவியிலிருப்போரின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல்வேறுபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும் இதுவரையில் அரசாங்கம் மௌனம் சாதிப்பது கவலைக்குரிய விடயமே.

Share.

Comments are closed.