பிக்பாஸ் சீசன்2 விஜய் வழங்குகிறார?

விஜய் தொகுத்து வழங்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது. பிக்பாஸ் சீசன்1 ஹிட் ஆகியுள்ளதால்; அந்த சூடு ஆறுவதற்குள் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொடங்கும் தீவிரத்தில் இருக்கிறது அந்த தனியார் தொலைக்காட்சி. பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சியின் பிரமாண்டமான வெற்றிக்கு கமல்ஹாசனும் மிகப்பெரிய காரணம் என்பதால் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கும் கமல்ஹாசனே தொகுப்பாளராக ஆக்க நினைக்கிறது தொலைக்காட்சி நிர்வாகம். ஆனால், அவர் அரசியலில் நுழையும் ஆர்வத்தில் இருப்பதால்; நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது சிரமம் என்பதால், அவரைப் போன்ற ஒரு பெரிய ஸ்டாரை வைத்து நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில்; பிக்பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியை, நடிகர் விஜய் தொகுத்து வழங்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது. இது பற்றி விஜய் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. ஆனால், நடிகர் விஜய் பக்கம் இருந்து இன்னும் சிக்னல் விழவில்லை!தற்போது விஜய், சினிமாவில் பிஸியாக உள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவாரா? என்பதை உறுதியாக சொல்வதற்கில்லை!