Breaking News
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2 அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
 
இரட்டை இலை சின்னம் வழக்கு முடிவு எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைத்தது
திருப்பரங்குன்ற தேர்தல் மனுவில் இருந்த ஜெயலலிதா கைரேகையில் உயிரோட்டம் இல்லை திமுக பிரமுகர் சரவணன்

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றது International Campaign to Abolish Nuclear Weapons(ICAN) என்ற அமைப்பு

0

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்ற International Campaign to Abolish Nuclear Weapons(ICAN) என்ற அமைப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ICAN அமைப்புக்கு எனது வாழ்த்துக்கள். அணுவாயுதங்கள் இல்லாத உலகமே இப்போது நமக்கு தேவைப்படுகின்றது. என குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று ஒஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.இதில் சர்வதேச அளவில் அணு ஆயுதங்களுக்கு எதிராக போராடி வந்த International Campaign to Abolish Nuclear Weapons(ICAN) என்ற அமைப்பிற்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் அசாதாரண சூழலை தடுக்கவும், அணு ஆயுத பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கவும் போராடியதற்காக இந்த நோபல் விருது வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.

Comments are closed.