Wednesday , September 30 2020
Breaking News

Uncategorized

செவ்வாய் கிரகத்துக்கு அமெரிக்காவும் விண்கலத்தை ஏவியது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனம், செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை ஏவி உள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கானவேரல் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. செவ்வாய் கிரகம் இம்மாதம் பூமிக்கு மிக அருகில் வர உள்ளதால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து அமெரிக்காவும் விண்கலத்தை செலுத்தி உள்ளது. அட்லாஸ் 5 என்ற ரொக்கட் மூலம் பிரிசெர்வென்ஸ் என்று …

Read More »

புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்ளும் நிகழ்வை நடத்துவதில் சிக்கல்.

வரும் ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை அடுத்து, புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்ளும் நிகழ்வை நடத்துவதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்புக்கான சுகாதார வழிகாட்டல் முறைகளுக்கு அமைய இந்த நிகழ்வை நடத்துவதிலேயே நாடாளுமன்ற அதிகாரிகள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இதன்போது, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகள், தனிமைப்படுத்தல் சட்டவிதிகள் என்பனவற்றுக்கிடையில் மோதல்கள் ஏற்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளின் படி …

Read More »

கொழும்பு தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணை

கொழும்பு தேசிய தொற்றுநோய் மருத்துவமனையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் நேற்று தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 41 வயதுடைய கைதியான குறித்த தொற்றாளர், இராணுவத்தினரால் மத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு, சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்த போதே தப்பிச் சென்றிருந்தார் என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார். “மருத்துவமனையில் இருந்து அவர் …

Read More »

நேற்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா தொற்று- கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது தமிழக அரசு.

தமிழகத்தில் இதுவரை இல்லாதளவாக நேற்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பரவல் வேகம் முன்பைவிட சற்று தணிந்துள்ள நிலையில், வெளி மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாலை சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவலின் படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா …

Read More »

தேர்தலுக்குப் பின் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக இலங்கை அரசு வாக்குறுதி – இராஜதந்திர வட்டாரங்கள் தகவல்.

தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தித் திட்டத்தை, இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை 500 மில்லியன் டொலர் செலவில், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டு இணக்கப்பாடு எட்டியிருந்தது. இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், …

Read More »

வல்லை வெளிப் பகுதியில் இடம் பெற்ற வெடிப்பு சம்பவம்

யாழ்ப்பாணம், வல்லை வெளிப் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில், இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வல்லைச் சந்தியில் உள்ள இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரால் தவறவிடப்பட்ட பொதியை அவதானித்த இராணுவ அதிகாரி, அதனைப் பிரிக்க முற்பட்டபோது, வெடிப்பு இடம்பெற்றதாக …

Read More »