Monday , September 28 2020
Breaking News

இந்தியா

முக கவசம் அணியாவிட்டால் 1000 ரூபா அபராதம்- குஜராத் அரசு உத்தரவு.

குஜராத்தில் பொது இடங்களில்முக கவசம்அணியாமல் சென்றால் 1000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குஜராத்தில் நோய் தொற்று பாதிப்புகளை கட்டுப்படுத்த அமாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையிலேயே பொது இடத்தில்முக கவசம் அணியாமல் சென்றால் 1000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில …

Read More »

கருணாஸ் மற்றும் பவுன்ராஜ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று.

தமிழகத்தில் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பலரும் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்தநிலையில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது பாதுகாவலருக்கு கொரோனா தொற்று உறுதியான …

Read More »

மும்பையில் 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த கடும் மழை.

மும்பையில் 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டித் தீர்த்த கடும் மழையால் நகரின் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், மும்பையில் ஓகஸ்ட் 8ம் திகதி வரை கடும்மழை கொட்டும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நேற்று மும்பையில் 10 மணி நேரத்தில் 250 மி.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ந்து …

Read More »

இந்திய சுதந்திர தினமான எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் திகதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து.

இந்திய சுதந்திர தினமான எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் திகதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ம் திகதி இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகையில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் ராஜ்பவனில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மருத்துவமனையின் மருத்துவர் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. …

Read More »

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, வடக்கு லடாக்கில் இந்தியா படைகள் குவிப்பு.

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, வடக்கு லடாக்கில் இந்தியா படைகளை குவித்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தி வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா – சீனா இடையே, கடந்த சில மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வரும் நிலையல், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இரு தரப்பு இராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இரு நாடுகளும், தமது தங்கள் படைகளை, …

Read More »

அங்கொட லொக்கா எனப்படும் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனின் மரணம் – சிபிசிஐடி விசாரணை

கோவையில் மரணமான அங்கொட லொக்கா எனப்படும் இலங்கையின் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனின் மரணம் தொடர்பான, விசாரணைகள் சிபிசிஐடி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அங்கொட லொக்கா, இலங்கையில் பிரபல ரவுடியாகவும், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாகவும் வலம் வந்தவர். கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்ட அவர் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று கடந்த 2018ம் ஆண்டு தொடக்கம் கோவையில் வசித்து வந்துள்ளார். இவருடன் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, என்ற பெண் …

Read More »

போலி ஆவணங்களின் மூலம், அங்கொட லொக்காவின் சடலத்தை எரித்த இரண்டு பெண்கள் கைது.

போலி ஆவணங்களின் மூலம், அங்கொட லொக்காவின் சடலத்தை எரித்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை கோயம்புத்தூர் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி என்பவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன் பகுதியில் தங்கியிருந்த தனது உறவினர் பிரதிப்சிங் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என, பீளமேடு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இதற்காக அவர் பிரதாப்சிங்கின் அடையாள சான்றாக ஆதார் அட்டையையும் வழங்கியுள்ளார். இதையடுத்து …

Read More »

இந்திய அரசியல் தலைவர்களை துரத்தும் கொரோனா – அமித் ஷா, எடியூரப்பா, தமிழக ஆளுநருக்கும் தொற்று.

இந்தியாவில் மத்திய உள்துறை அமைச்சர், கர்நாடக மாநில முதல்வர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்தியாவின் அரசியல் தலைவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. கர்நாடக முதல்வரும், பாஜகவின் முக்கிய தலைவருமான எடியூரப்பாவுக்கு நேற்றிரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா …

Read More »

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பு மருந்து செலுத்தியவர்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியான, கோவாக்சின் மருந்து செலுத்தப்பட்ட அனைவரும், நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிக்கும் பரிசோதனையில் தீவிரமாக உள்ளனர். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய …

Read More »

டெல்லியில் ஊரடங்கு தளர்வை அறிவித்த முதல்வர் – ஆளுநர் அனுமதி மறுத்ததால் மோதல்.

டெல்லியில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தும் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவுக்கு, மாநில ஆளுநர் ஒப்பதல் வழங்க மறுத்துள்ளதால் மோதல் ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கில் இன்று முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 'மெட்ரோ' ரயில், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான கூடங்கள், கலை அரங்கங்கள் இயங்காது. அரசியல், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சமூக,- கலாச்சார கூட்டங்களுக்கான தடை உத்தரவு தொடரும் என்று …

Read More »