Tuesday , September 29 2020
Breaking News

இந்தியா

அசாமில், கடும் மழை காரணமாக, காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அசாமில், கடும் மழை காரணமாக, காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அங்கிருந்த, ஒன்பது காண்டாமிருகங்கள் உள்ளிட்ட, 108 வன விலங்குகள், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. பிரம்மபுத்ரா நதியின் நீர்மட்டம், உயர்ந்துள்ளது. இதையடுத்து, 26 மாவட்டங்களில் உள்ள, 2,700 கிராமங்கள், முழுமையாக வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த, 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 1.17 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. மழை …

Read More »

ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா – தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 திமுக எம்எல்ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 63 வயதுடைய கிருஷ்ணகிரி தொகுதி, தி.மு.க., எம்.எல்.ஏ. செங்குட்டுவன், காய்ச்சலை அடுத்து ஓசூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்குட்டுவனுக்கு ஏற்கனவே, இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதால் அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதேவேளை, வேலூர் …

Read More »

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதல்வர் அலுவலகத்துக்கு சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,108 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 47 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கான்பூர், ஆக்ரா, மீரட் போன்ற நகரங்களில் நூற்றுக்கும் …

Read More »

திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்ளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து எம்.எல்.ஏ கணேசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் …

Read More »

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர், பசு கோமியத்தை குடிக்குமாறு அறிவுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஒருவர், பசு கோமியத்தை குடிக்குமாறு அறிவுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கவும் பல்வேறு மருத்துவ முறைகள் கூறப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மேற்கு வங்க மாநில பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ் பசுவின் கோமியத்தை குடித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமாறு அறிவுறுத்தி …

Read More »

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இன்று முழு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்த மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும் தமிழகம் முழுவதும், எவ்வித தளர்வுகளுமின்றி, முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இன்று, அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். வாகனங்கள் எதுவும் இயங்காது. மக்கள் அனைவரும் வெளியில் வராமல், வீடுகளிலே தங்கியிருந்து, அரசுக்கு ஒத்துழைப்பு தர,வேண்டும். என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More »

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி.

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், சென்னை, கிறீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முன்னதாக அமைச்சர் நிலோபர் கபிலின் மகன், மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. அமைச்சர் நிலோபர் கபில் நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஏற்கனவே தமிழக அரசின் மூன்று அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று …

Read More »

மும்பையில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த கட்டடங்கள் – 7 பேர் பலி, 16 பேர் படுகாயம்.

மும்பை நகரில் நேற்று இரண்டு கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், மும்பையில் உள்ள போர்ட் பகுதியில் இருந்த ஐந்துமாடி கட்டிடம் கடும் மழை காரணமாக நேற்று பிற்பகல் 4.40 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் தங்கி இருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் …

Read More »

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களைத் துரத்தும் கொரோனா – ஒரே நாளில் இருவருக்கு தொற்று.

தமிழகத்தில், கோவை மாவட்ட ஆட்சியரை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சிவில் அதிகாரிகள் என எவரையும் விட்டு வைக்காமல் கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது. நேற்றுக் காலை கோவை மாவட்ட ஆட்சியர். ராஜாமணிக்கு கொரோனா  உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். கோவை …

Read More »

ஜனதா கட்சியின் தலைவர் ரவீந்திரா ரெய்னாவுக்கு கொரோனா.

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ரவீந்திரா ரெய்னாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திரா தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். காஷ்மீரில் கடந்த சில வாரங்களுக்கு முன் பாரதீய ஜனதா கட்சி .பிரமுகர் வாசிம்பாரி உள்ளிட்ட மூன்று பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், பாரதீய ஜனதா …

Read More »