Saturday , September 26 2020
Breaking News

விளையாட்டு

இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பம்.

13 வது இருபதுக்கு இருப்பது ஓவர் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக இந்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங் அணியின் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோதவுள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் இடம்பெறவிருந்த ஐ.பி.எல் தொடர் covid – 19 பரவல் காரணமாக பிற்போடப்பட்டிருந்தது. பின்னர் இந்த தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் …

Read More »

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீர்ர்கள் எவருக்கும் இடமளிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. 2-வது டெஸ்ட் பெரும்பாலான நாட்கள் மழையினால் பாதிக்கப்பட்டதால், சமநிலையில் முடிந்துள்ளது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை ஆரம்பமாகவுள்ளது. …

Read More »

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில்,  முதலாவது  நாள் ஆட்டம் நேற்று மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில்,  முதலாவது  நாள் ஆட்டம் நேற்று மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி,  சவுதம்டனில் …

Read More »

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மான்செஸ்டரில் கடந்த ஐந்தாம் திகதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஏஜியஸ் பவுல் மைதானத்தில் இன்று  தொடங்குகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் …

Read More »

லங்கா பிரிமீயர் லீக் போட்டித் தொடர், நவம்பருக்கு ஒத்திவைப்பு.

எதிர்வரும் 28-ஆம் திகதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த லங்கா பிரிமீயர் லீக் போட்டித் தொடர், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை  டி20 லீக் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருந்தது. வரும் 28-ந் திகதி லங்கா பிரிமீயர் லீக் என்ற பெயரில் இந்தப் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஐந்து அணிகள் 23 ஆட்டங்களில் விளையாடும் எனவும், தெரிவிக்கப்பட்டது. கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ள, யாழ்ப்பாணம் நகரங்களை கொண்ட அணிகள் அறிவிக்கப்பட்டன. …

Read More »

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 326 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது.

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 326 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளது. இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்றுமுன்தினம் தொடங்கியது. பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது, மழை அடிக்கடி குறுக்கிட்டதால் முதல் நாளில் 49 ஓவர்களே பந்து வீசப்பட்டன. பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் எடுத்திருந்தது. …

Read More »

மான்செஸ்டர் டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் மழை குறுக்கிட்டதால் 49 ஓவருடன் தடைப்பட்டது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று  மான்செஸ்டரில் தொடங்கியுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த்து. ஷான் மசூட், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபித் அலி 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் அசார் அலி களம் இறங்கினார். அவர் ஓட்டம் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் …

Read More »

வேண்டுமென்றே இருமினால் தடைவிதிக்கப்படும் – இங்கிலாந்து உதைபந்தாட்ட சங்கம் எச்சரிக்கை

உதைபந்தாட்ட போட்டியின்போது எதிரணி வீரர்களின் முகம் அருகே அல்லது நடுவரின் முகம் அருகே வேண்டுமென்றே இருமினால், அவர்களுக்கு தடைவிதிக்கப்படும் என இங்கிலாந்து உதைபந்தாட்ட சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவிய பின்னர், ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஒரு வீரரிடம் இருந்து மற்றொரு வீரருக்கு கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மைதானங்களில் …

Read More »

ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் செப்ரெம்பர் 19 ஆம் திகதி தொடக்கம், நொவம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும்

ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் செப்ரெம்பர் 19 ஆம் திகதி தொடக்கம், நொவம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது. மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவதற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி போட்டிகள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் …

Read More »

ஐபிஎல் நிறைவேற்றுக்குழு இன்று கூடுகிறது – போட்டியை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயும்.

போட்டி அட்டவணை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக ஐ.பி.எல். நிறைவேற்றுக் குழு இன்று கூடவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர், துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் செப்ரெம்பர் 19 ஆம் திகதி முதல் நவம்பர் 8 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தப் போட்டியை …

Read More »