Thursday , September 24 2020
Breaking News

விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்த இளம் சிங்கங்கள் தயார் – என்கிறார் பாகிஸ்தான் அணித் தலைவர்.

இங்கிலாந்து அணியைத் திணறடிக்க 17 மற்றும் 20 வயது இளம் சிங்கங்களை தயார்படுத்தியுள்ளோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அசார் அலி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு பாகிஸ்தான் விளையாடும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். முதல் டெஸ்ட் வரும் ஐந்தாம் திகதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்தை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக …

Read More »

அயர்லாந்து அணியை, இங்கிலாந்து அணி இலகுவாக வீழ்த்தியுள்ளது.

சவுத்தாம்ப்டனில் நடந்த முதலாவது, ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணியை, இங்கிலாந்து அணி இலகுவாக வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் அயர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கியடி அயர்லாந்து அணி 28 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டை இழந்து தடுமாறியது. எனினும், அயர்லாந்து அணி …

Read More »

மான்செஸ்டரில் பாகிஸ்தான் – இங்கிலாந்து அணி இடையிலான டெஸ்ட் போட்டி – 5ஆம் திகதி ஆரம்பம்.

இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 5ஆம் திகதி தொடங்கவுள்ளது. இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி அணி ஏற்கனவே இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த நிலையில், முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் வரும் 5ஆம் திகதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இறுதி செய்யப்பட்டு …

Read More »

மான்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

மான்செஸ்டரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணியை 269 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதில் இரு அணிகளும் ஆர்வத்துடன் இருந்தன. நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் …

Read More »

மான்செஸ்டர் டெஸ்ட் நான்காவது நாள் ஆட்டம் ரத்து – இங்கிலாந்து அணி ஏமாற்றம்.

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டதால் இங்கிலாந்து அணியின் வெற்றிக் கனவு கேள்விக்குறியாகியுள்ளது. இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 369 ஓட்டங்கள் குவித்தது. இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி முதல் …

Read More »

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 399 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு, 399 ஓட்டங்களை இங்கிலாந்து அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 369 ஓட்டங்கள் குவித்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்சை தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி6 …

Read More »

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் 248 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி.

மான்செஸ்டர் நகரில், நேற்று தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் நேற்று தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். …

Read More »

சமூக ஊடகங்களில் தன்மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் முறைப்பாடு.

தனக்கு எதிராக சமூக ஊடகங்களில் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, கொரானா தொடர்பான மருத்துவ பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்திற்காக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை …

Read More »

சமநிலையை நோக்கி நகரும் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி.

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ஓட்டங்கள் எடுத்துள்ள நிலையில், இந்தப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 469 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் …

Read More »

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் மழையினால் ரத்து.

மான்செஸ்டரில் நடந்து வரும் இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் மழையினால் கைவிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்திருந்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் ரொம் சிப்லி 120 ஓட்டங்களும், …

Read More »