Wednesday , September 30 2020
Breaking News

விளையாட்டு

கொரோனா தடுப்பு விதிகளை மீறிய இங்கிலாந்து அணி வீரர் ஆர்ச்சர் போட்டியில் இருந்து நீக்கம்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், கொரோனா விதிகளை மீறியதற்காக இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்ட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஜோப்ரா ஆர்ச்சர், 2வது …

Read More »

2022- இல் கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை FIFA வெளியிட்டுள்ளது.

2022- இல் கட்டாரில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை FIFA வெளியிட்டுள்ளது. 8 மைதானங்கள், 28 நாட்களுக்கு இந்த கால்பந்துப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. நவம்பர் முதலாம் திகதி இடம்பெறும் முதல் போட்டி பேய்ட் மைதானத்திலும், இறுதிப்போட்டி டிசம்பர் 18 ஆம் திகதி மாலை 6 மணிக்கு லுசைல் மைதானத்தில் …

Read More »

இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் 2வது டெஸ்ட், மான்செஸ்டர் ஒல்டு ட்ரபோர்ட் மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. சவுதாம்ப்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று …

Read More »

பட்லருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என்கிறார் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், துடுப்பாட்ட வீரருமான ஜோஸ் பட்லர் கடந்த 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில், அரைசதம் கூட அடிக்காத போதும், அவருக்கு இன்னும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் சேர்க்கப்படவில்லை. ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. ஜோஸ் பட்லர் முதல் …

Read More »

இரண்டு வார தனிமைப்படுத்தலுக்கு கங்குலி எதிர்ப்பு.

அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள், இரண்டு வார காலத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியல்ல என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர் சவுரவ் கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து கங்குலி கூறுகையில், “இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய அணி அவுஸ்ரேலியாவுக்கு விளையாட செல்வது உறுதி. அந்தப் போட்டி முக்கியமான போட்டியாக இருக்கும். ஆனால் டிசம்பர் மாதம் நான் பிசிசிஐ …

Read More »

சவுதாம்டன் டெஸ்டில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது மேந்திந்திய தீவுகள் அணி.

சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்தை  4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்களை எடுத்திருந்தது.  தொடர்ந்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்சில் 318 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து …

Read More »

சவுத்தாம்டன் டெஸ்டில் வெற்றியைத் தொடும் நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 170 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்களான ஜேசன் ஹோல்டர், கேப்ரியல் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சினால், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்களில் ஆட்டமிழந்த். …

Read More »

ஐபிஎல் இல்லாமல் செல்வதை நினைத்து பார்ப்பது கடினம்….யாண்டி ரோட்ஸ்

ஐபிஎல் 2020 சீசன் கொரோன வைரஸ் அச்சுறுத்தலால் காலவரை இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளுது. இதுவரையில் இது குறித்து யாண்டி ரோட்ஸ் ஐபிஎல் இல்லாத இந்த வருடத்தை கடந்து செல்வதை நினைக்கவே கடினமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர் கூறுவதாவது 2008 இலிருந்து கிரிக்கெட் அட்டவணையில் ஒரு அங்கமாக இருந்தது. மிக பெரிய தொடக்க ஆண்டில் இருந்து, ஒவ்வொரு வருடமும் போட்டியை சிறப்பாக நடத்த பிபிசிஐ முயற்ச்சி செய்து வருகிறது. …

Read More »

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 318 ஓட்டங்களைக் குவித்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்சில் 318 ஓட்டங்கள் குவித்து முன்னிலை பெற்றுள்ளது. இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட், சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி, முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்சை நேற்று முன்தினம் ஆடத் தொடங்கியது. 2-வது நாள் ஆட்ட முடிவில் …

Read More »

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ரத்து……

பாகிஸ்தானில் செப்டம்பரில் நடைபெற இருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை பெற்றிருந்தாலும், அந்த உரிமையை இலங்கை கிரிக்கெட் சபைக்கு விட்டுக்கொடுப்பதாகவும், அதற்கு பதிலாக அடுத்த ஆசிய கிண்ண போட்டியை நடத்தும் உரிமையை பெற்றுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, பாகிஸ்தான் …

Read More »